Guideவழிகாட்டி

How to post a death notice onlineமரண அறிவித்தல் இடுவது எப்படி?

Death notices, 31st day remembrances and anniversary remembrances are all posted the same way. It takes about ten minutes; have a photo and the funeral details ready.மரண அறிவித்தல், 31ம் நாள் நினைவஞ்சலி, ஆண்டு நினைவஞ்சலி எல்லாம் ஒரே முறையில் இடப்படுகின்றன. ஏறத்தாழ பத்து நிமிடங்கள் ஆகும்; படத்தையும் இறுதிக் கிரியை விவரங்களையும் தயாராக வைத்திருங்கள்.

Watch · 1 minuteகாணொளி · 1 நிமிடம்

See it done on a phoneகைபேசியில் செய்வதைப் பாருங்கள்

A sample death notice posted from start to finish: photo, details, announcement, funeral events and family contact.ஒரு மாதிரி மரண அறிவித்தல் தொடக்கம் முதல் முடிவு வரை: படம், விவரங்கள், அறிவித்தல், நிகழ்வுகள், குடும்பத் தொடர்பு.

+ Post a notice+ அறிவித்தல் இட

Step by stepபடிப்படியாக

  1. 1

    Open “Post a notice”“அறிவித்தல் இட” என்பதைத் திறக்கவும்

    Tap “+ Post a notice” at the top of any page. On a phone, use the “Post” tab in the bottom bar. You don’t need an account.எந்தப் பக்கத்திலும் மேலே உள்ள “+ அறிவித்தல் இட” பொத்தானை அழுத்துங்கள். கைபேசியில் கீழ்ப் பட்டியில் உள்ள “அறிவித்தல்” தாவலைப் பயன்படுத்துங்கள். கணக்கு தேவையில்லை.
  2. 2

    Choose the notice typeஅறிவித்தல் வகையைத் தேர்ந்தெடுக்கவும்

    Death notice, 31st day remembrance (antiyeddi) or anniversary remembrance.மரண அறிவித்தல், 31ம் நாள் நினைவஞ்சலி (அந்தியேட்டி) அல்லது ஆண்டு நினைவஞ்சலி.
  3. 3

    Add the main photoமுதன்மைப் படத்தைச் சேர்க்கவும்

    Choose a clear head-and-shoulders photo. A crop window opens: drag the photo and zoom until the face sits nicely in the frame, then press “Use photo”. Large photos are made smaller on your phone before they are sent.தெளிவான முகப் படத்தைத் தேர்ந்தெடுங்கள். வெட்டும் சாளரம் திறக்கும்: முகம் சட்டத்துக்குள் அழகாக அமையும் வரை படத்தை இழுத்து, பெரிதாக்கி, “இந்தப் படத்தைப் பயன்படுத்து” அழுத்துங்கள். பெரிய படங்கள் அனுப்பும் முன் உங்கள் கைபேசியிலேயே சிறிதாக்கப்படும்.
  4. 4

    Fill in the details of the deceasedஅமரரின் விவரங்களை நிரப்பவும்

    Honorific (Mr, Mrs, Dr…), name in Tamil (required), name in English, dates of birth and death, hometown, the city where they lived and the country.மரியாதை (திரு, திருமதி, வைத்தியர்…), தமிழில் பெயர் (கட்டாயம்), ஆங்கிலத்தில் பெயர், மலர்வு, உதிர்வு திகதிகள், பிறப்பிடம், வதிவிடம், நாடு.
  5. 5

    Write the announcementஅறிவித்தலை எழுதவும்

    Write it in Tamil, English or both — who has passed away, their family (spouse, children, parents, siblings) and any message from the family. See the sample wording below.தமிழிலோ ஆங்கிலத்திலோ இரண்டிலுமோ எழுதலாம் — அமரர் யார், அவரது குடும்பத்தினர் (கணவன்/மனைவி, பிள்ளைகள், பெற்றோர், சகோதரர்கள்), குடும்பத்தினரின் செய்தி. கீழே உள்ள மாதிரியைப் பாருங்கள்.
  6. 6

    Add more photos (optional)மேலும் படங்கள் (விரும்பினால்)

    Add up to 10 photos for the gallery — family moments, younger days. They appear in the order you add them.படத் தொகுப்புக்கு அதிகபட்சம் 10 படங்களைச் சேர்க்கலாம் — குடும்பத் தருணங்கள், இளமைக் காலப் படங்கள்.
  7. 7

    Add the funeral and remembrance eventsஇறுதிக் கிரியை / நினைவு நிகழ்வுகளைச் சேர்க்கவும்

    For each event — viewing, funeral rites, cremation or burial, antiyeddi, home prayers, lunch — choose the type, date and time, an optional end time, the venue and its address. Up to 8 events; visitors get a map link and an “add to calendar” button.பார்வைக்கு, இறுதிக் கிரியை, தகனம் / நல்லடக்கம், அந்தியேட்டி, வீட்டுக்கிருத்தியம், மதிய போசனம் — ஒவ்வொன்றுக்கும் வகை, திகதி, நேரம், முடியும் நேரம் (விரும்பினால்), இடம், முகவரி. அதிகபட்சம் 8 நிகழ்வுகள்; வருகையாளர்களுக்கு வரைபட இணைப்பும் நாட்காட்டியில் சேர்க்கும் வசதியும் கிடைக்கும்.
  8. 8

    Add a family contactதொடர்புக்கு — குடும்பத்தினர்

    The name, relation (son, daughter…) and phone number shown on the notice, so people can reach the family. Write the phone number with the country code, e.g. +94 77 123 4567.அறிவித்தலில் காட்டப்படும் பெயர், உறவு (மகன், மகள்…), தொலைபேசி இலக்கம். நாட்டுக் குறியீட்டுடன் எழுதுங்கள், உ-ம்: +94 77 123 4567.
  9. 9

    Add your own details and submitஉங்கள் விவரங்களைச் சேர்த்து அனுப்பவும்

    Your name and phone number are not published — we use them only to check the notice with you. Press “Submit notice”.உங்கள் பெயரும் தொலைபேசி இலக்கமும் வெளியிடப்படாது — அறிவித்தலை உங்களுடன் சரிபார்க்க மட்டுமே பயன்படுத்துவோம். “அனுப்பு” அழுத்துங்கள்.
  10. 10

    We check it, publish it — then share itசரிபார்த்து வெளியிடுவோம் — பின் பகிருங்கள்

    We contact you to confirm the details, then publish the notice. Share the link on WhatsApp, Facebook or by message; the preview shows the photo and name.விவரங்களை உறுதிப்படுத்த உங்களைத் தொடர்புகொண்டு, பின் அறிவித்தலை வெளியிடுவோம். இணைப்பை WhatsApp, Facebook அல்லது குறுஞ்செய்தி மூலம் பகிருங்கள்; படமும் பெயரும் முன்னோட்டத்தில் தெரியும்.

Sample wording for a death noticeமரண அறிவித்தல் மாதிரி வாசகம்

Not sure what to write? Families often follow this pattern. Copy it and change the names, places and dates. (The person below is fictional.)என்ன எழுதுவது என்று தெரியவில்லையா? பல குடும்பங்கள் இந்த முறையைப் பின்பற்றுகின்றன. நகலெடுத்துப் பெயர்கள், இடங்கள், திகதிகளை மாற்றுங்கள். (கீழே உள்ளவர் கற்பனையானவர்.)

Mr. Kandiah Sivapalan, born in Kondavil, Jaffna, and living in Toronto, Canada, passed away peacefully on 10 October 2026. Beloved son of the late Kandiah and Parvathy, loving husband of Shantha, and dear father of Priya and Karthik. Details of the funeral are given below. Relatives and friends are kindly asked to accept this notice. Information: the family

யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவபாலன் அவர்கள் 10-10-2026 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா – பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், சாந்தா அவர்களின் அன்புக் கணவரும், பிரியா, கார்த்திக் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல்: குடும்பத்தினர்

Tipsகுறிப்புகள்

  • Write the name exactly as the family uses it, with the honorific (Mr, Mrs, Miss, Dr…).குடும்பத்தினர் பயன்படுத்தும் வடிவில், மரியாதைச் சொல்லுடன் (திரு, திருமதி, செல்வி, வைத்தியர்…) பெயரை எழுதுங்கள்.
  • Give both the hometown (e.g. Kondavil, Jaffna) and the city where they lived (e.g. Toronto) — people search by both.பிறப்பிடம் (உ-ம்: கோண்டாவில், யாழ்ப்பாணம்), வதிவிடம் (உ-ம்: ரொறன்ரோ) இரண்டையும் தாருங்கள் — மக்கள் இரண்டாலும் தேடுகிறார்கள்.
  • Add the funeral times even if they are not final yet — we can update them when you tell us.இறுதி நேரங்கள் உறுதியாகாவிட்டாலும் சேருங்கள் — நீங்கள் சொன்னதும் புதுப்பிப்போம்.
  • For the 31st day remembrance or the anniversary, post a new notice of that type — we link it to the death notice.31ம் நாள் அல்லது ஆண்டு நினைவஞ்சலிக்கு, அந்த வகையில் புதிய அறிவித்தலை இடுங்கள் — மரண அறிவித்தலுடன் இணைப்போம்.

After it is published, relatives can make a memorial card from the notice — see how to download a memorial card. More answers are in the questions & answers.வெளியான பின், உறவினர்கள் அறிவித்தலிலிருந்து நினைவு அட்டை செய்யலாம் — நினைவு அட்டையைப் பதிவிறக்குவது எப்படி. மேலும் பதில்கள் கேள்விகளும் பதில்களும் பக்கத்தில்.