FAQகேள்வி–பதில்

Questions & answersகேள்விகளும் பதில்களும்

Posting a noticeஅறிவித்தல் இடுதல்

How do I post a death notice online?மரண அறிவித்தலை இணையத்தில் எப்படி இடுவது?

Tap “+ Post a notice” (or “Post” in the bottom bar on a phone), choose “Death notice”, add a photo, the name, dates, hometown, the announcement, funeral events and a family contact, then press “Submit notice”. We check the details with you and publish it. The step-by-step guide at kanneeranjali.com/help/post-notice has a short video.“+ அறிவித்தல் இட” (கைபேசியில் கீழ்ப் பட்டியில் “அறிவித்தல்”) அழுத்தி, “மரண அறிவித்தல்” தேர்ந்தெடுத்து, படம், பெயர், திகதிகள், பிறப்பிடம், அறிவித்தல், இறுதிக் கிரியை நிகழ்வுகள், குடும்பத் தொடர்பு ஆகியவற்றைச் சேர்த்து “அனுப்பு” அழுத்துங்கள். விவரங்களை உங்களுடன் சரிபார்த்து வெளியிடுவோம். kanneeranjali.com/help/post-notice இல் படிப்படியான வழிகாட்டியும் காணொளியும் உள்ளன.

Do I need an account to post a notice?அறிவித்தல் இட கணக்கு தேவையா?

No. Anyone can post a notice for their family. If you are signed in, the notice also appears under “My notices” in your account so you can follow its status.இல்லை. எவரும் தங்கள் குடும்பத்துக்காக அறிவித்தல் இடலாம். உள்நுழைந்திருந்தால், அறிவித்தல் உங்கள் கணக்கில் “எனது அறிவித்தல்கள்” பகுதியிலும் தோன்றும்; அதன் நிலையைப் பார்க்கலாம்.

Why isn’t my notice online straight away?என் அறிவித்தல் ஏன் உடனே வெளியாகவில்லை?

Every notice is checked before it is published, so that nobody can announce a death that hasn’t happened. We contact you on the phone number you gave, confirm the details and then publish it.நடக்காத மரணத்தை யாரும் அறிவிக்க முடியாதபடி, ஒவ்வொரு அறிவித்தலும் வெளியிடும் முன் சரிபார்க்கப்படுகிறது. நீங்கள் தந்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு, விவரங்களை உறுதிப்படுத்திய பின் வெளியிடுவோம்.

Can I post a 31st day remembrance (antiyeddi) or an anniversary remembrance?31ம் நாள் நினைவஞ்சலி (அந்தியேட்டி) அல்லது ஆண்டு நினைவஞ்சலி இடலாமா?

Yes. Choose “31st day remembrance” or “Anniversary remembrance” as the notice type. If the death notice is already on the site, we link the two so visitors can find both.ஆம். அறிவித்தல் வகையாக “31ம் நாள் நினைவஞ்சலி” அல்லது “ஆண்டு நினைவஞ்சலி” தேர்ந்தெடுங்கள். மரண அறிவித்தல் ஏற்கனவே தளத்தில் இருந்தால், இரண்டையும் இணைப்போம்.

Can I write the notice in Tamil?அறிவித்தலைத் தமிழில் எழுதலாமா?

Yes. The name in Tamil is required, and the announcement can be in Tamil, English or both. Visitors can switch the whole site between English and Tamil with the button at the top.ஆம். தமிழில் பெயர் கட்டாயம்; அறிவித்தலைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ இரண்டிலுமோ எழுதலாம். மேலே உள்ள பொத்தானால் முழுத் தளத்தையும் தமிழுக்கு அல்லது ஆங்கிலத்துக்கு மாற்றலாம்.

Which photos can I add?எந்தப் படங்களைச் சேர்க்கலாம்?

One main portrait and up to 10 gallery photos. Use photos your family took or has the right to share. Big photos are shrunk on your phone before upload, so they send quickly even on mobile data.ஒரு முதன்மைப் படமும் படத் தொகுப்புக்கு அதிகபட்சம் 10 படங்களும். உங்கள் குடும்பம் எடுத்த அல்லது பகிர உரிமையுள்ள படங்களைப் பயன்படுத்துங்கள். பெரிய படங்கள் உங்கள் கைபேசியிலேயே சிறிதாக்கப்படுவதால், கைபேசித் தரவிலும் விரைவாக அனுப்பலாம்.

How do I add funeral, cremation and antiyeddi details?இறுதிக் கிரியை, தகனம், அந்தியேட்டி விவரங்களை எப்படிச் சேர்ப்பது?

In “Funeral & remembrance events”, add one row per event: type, date and time, venue and address. You can add up to 8 events. The address becomes a map link and visitors can add the event to their calendar.“நிகழ்வுகள்” பகுதியில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு வரி: வகை, திகதி, நேரம், இடம், முகவரி. அதிகபட்சம் 8 நிகழ்வுகள். முகவரி வரைபட இணைப்பாகும்; வருகையாளர்கள் நிகழ்வைத் தங்கள் நாட்காட்டியில் சேர்க்கலாம்.

How do I change or remove a notice after it is published?வெளியான அறிவித்தலை எப்படி மாற்றுவது அல்லது நீக்குவது?

Contact us through the chat button or at [email protected] with the link to the notice and what should change. We update or remove it after checking that the request comes from the family.அறிவித்தலின் இணைப்பையும் என்ன மாற்ற வேண்டும் என்பதையும் அரட்டைப் பொத்தான் மூலம் அல்லது [email protected] க்கு அனுப்புங்கள். கோரிக்கை குடும்பத்தினரிடமிருந்து வருவதை உறுதிசெய்த பின் மாற்றுவோம் அல்லது நீக்குவோம்.

Memorial cardsநினைவு அட்டைகள்

How do I download a kanneer anjali memorial card?கண்ணீர் அஞ்சலி நினைவு அட்டையை எப்படிப் பதிவிறக்குவது?

Open the notice, tap “Download memorial card”, sign in, choose one of nearly 50 designs, add who shares the grief (family, relatives, villagers…) and press “Download card (PNG)”. On a phone you can share it straight to WhatsApp.அறிவித்தலைத் திறந்து “நினைவு அட்டையைப் பதிவிறக்குக” அழுத்தி, உள்நுழைந்து, கிட்டத்தட்ட 50 வடிவமைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, துயர் பகிர்வோரைச் (குடும்பத்தினர், உறவினர், ஊர் மக்கள்…) சேர்த்து “அட்டையைப் பதிவிறக்குக (PNG)” அழுத்துங்கள். கைபேசியில் நேரடியாக WhatsApp-க்குப் பகிரலாம்.

Why do I need to sign in to make a card?அட்டை செய்ய ஏன் உள்நுழைய வேண்டும்?

Cards carry the family’s photo and name, so we ask for a free account to keep them from being made in bulk or misused. An account needs only your name, email and a password.அட்டைகளில் குடும்பத்தின் படமும் பெயரும் இருப்பதால், அவை பெருமளவில் உருவாக்கப்படுவதையும் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க இலவசக் கணக்கைக் கேட்கிறோம். பெயர், மின்னஞ்சல், கடவுச்சொல் மட்டும் போதும்.

Can I print the memorial card?நினைவு அட்டையை அச்சிடலாமா?

Yes. The downloaded card is a high-resolution PNG image (at least 1200 pixels wide), good for printing, WhatsApp status and Facebook.ஆம். பதிவிறக்கும் அட்டை உயர் தெளிவு PNG படம் (குறைந்தது 1200 பிக்சல் அகலம்) — அச்சிடவும், WhatsApp Status, Facebook க்கும் ஏற்றது.

Visiting a noticeஅறிவித்தலைப் பார்வையிடுதல்

How do I find a death notice?மரண அறிவித்தலை எப்படிக் கண்டுபிடிப்பது?

The home page lists the latest notices. Use the filter button to search by name, hometown (for example Jaffna, Point Pedro, Batticaloa) or country (Canada, UK, Switzerland, Germany, France, Australia…).முகப்புப் பக்கத்தில் அண்மைய அறிவித்தல்கள் உள்ளன. வடிகட்டிப் பொத்தானைப் பயன்படுத்தி பெயர், பிறப்பிடம் (உ-ம்: யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மட்டக்களப்பு) அல்லது நாடு (கனடா, பிரித்தானியா, சுவிஸ், ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா…) மூலம் தேடலாம்.

How do I write a condolence message?இரங்கல் செய்தியை எப்படி எழுதுவது?

At the bottom of the notice, under “Condolences”, write your name, your city if you like, and your message. It appears on the notice for the family to read.அறிவித்தலின் கீழே “இரங்கல் செய்திகள்” பகுதியில் உங்கள் பெயர், விரும்பினால் உங்கள் நகரம், உங்கள் செய்தி ஆகியவற்றை எழுதுங்கள். அது குடும்பத்தினர் வாசிக்க அறிவித்தலில் தோன்றும்.

What does “Light a lamp” mean?“தீபம் ஏற்று” என்றால் என்ன?

It is a quiet way to pay your respects without writing a message. The number of lamps lit is shown on the notice; your name is not recorded.செய்தி எழுதாமல் அஞ்சலி செலுத்தும் அமைதியான வழி இது. ஏற்றப்பட்ட தீபங்களின் எண்ணிக்கை அறிவித்தலில் காட்டப்படும்; உங்கள் பெயர் பதிவாகாது.

How do I share a notice on WhatsApp or Facebook?அறிவித்தலை WhatsApp அல்லது Facebook இல் எப்படிப் பகிர்வது?

Use the share buttons at the top of the notice. On a phone, “Share” opens your phone’s share menu. The link preview shows the photo, the name and the years.அறிவித்தலின் மேலே உள்ள பகிர்வுப் பொத்தான்களைப் பயன்படுத்துங்கள். கைபேசியில் “பகிர்” உங்கள் கைபேசியின் பகிர்வுப் பட்டியைத் திறக்கும். இணைப்பின் முன்னோட்டத்தில் படம், பெயர், ஆண்டுகள் தெரியும்.

Privacy and safetyதனியுரிமையும் பாதுகாப்பும்

Who can see the phone numbers I give?நான் தரும் தொலைபேசி இலக்கங்களை யார் பார்க்கலாம்?

The family contact is shown on the notice so people can reach the family. Your own details as the person posting (name, phone, email) are never published — we use them only to check the notice with you.குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள, “தொடர்புக்கு” விவரம் அறிவித்தலில் காட்டப்படும். அறிவித்தலை இடும் உங்கள் விவரங்கள் (பெயர், தொலைபேசி, மின்னஞ்சல்) ஒருபோதும் வெளியிடப்படாது — அறிவித்தலைச் சரிபார்க்க மட்டுமே பயன்படுத்துவோம்.

A notice is wrong, or uses my photo without permission. What can I do?ஓர் அறிவித்தல் தவறானது அல்லது என் படத்தை அனுமதியின்றிப் பயன்படுத்துகிறது. என்ன செய்வது?

Email [email protected] with the link and what is wrong. We take wrong notices offline while we check, and remove photos used without permission. See the copyright & content page for details.இணைப்பையும் என்ன தவறு என்பதையும் [email protected] க்கு அனுப்புங்கள். சரிபார்க்கும் வரை தவறான அறிவித்தலை மறைப்போம்; அனுமதியின்றிப் பயன்படுத்திய படங்களை நீக்குவோம். விவரங்களுக்கு பதிப்புரிமை, உள்ளடக்கப் பக்கத்தைப் பாருங்கள்.